ஆரம்பத்தில் வாலி குஷி போன்ற படங்களை இயக்கிய இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஜே சூர்யா. அதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார். சமீப காலமாக வில்லனாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். ஏற்கனவே வெளியான ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார். இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள எல்ஐசி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் தான் எல்ஐசி LIC-LIFE INSURANCE CORPORATION. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ருத்தி ஷெட்டி நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
தற்போது எஸ் ஜே சூர்யா படம் குறித்த அப்டேட்டுகளை கொடுத்துள்ளார்.
😘LIC🥰 – “Love Insurence Corporation” …. How exciting the movie tittle is that exciting the movie will be ….. last day 3pm to 3am had a 12 hours continuous work shop for 🥰 LIC🥰 … Dir @VigneshShivN sir , @pradeeponelife sir and myself had a awesome session 👍👍👍 … I felt…
— S J Suryah (@iam_SJSuryah) December 23, 2023
அதன்படி எஸ் ஜே சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில், “எல் ஐ சி படத்தின் தலைப்பு எவ்வளவு பரபரப்பானதோ அந்த அளவிற்கு படமும் பரபரப்பாக இருக்கும். கடந்த நாள் நண்பகல் 3 மணி முதல் அதிகாலை 3 மணி வரை எல்ஐசி படத்திற்கான ஒர்க் ஷாப் தொடர்ந்து இருந்தது. விக்னேஷ் சிவன், பிரதிப் ரங்கநாதன், ஆகியோருடன் நானும் இருந்தேன். விக்னேஷ் சிவன் வேடிக்கை நிறைந்த, பொழுதுபோக்கு, புதுயுக காதல் உலகிற்கு எங்களை அழைத்துச் செல்லும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். எல் ஐ சி படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
எனவே இந்தப் படம் லவ் டுடே படத்தைப் போல இன்றைய இளைஞர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.