Homeசெய்திகள்ஆவடிஇளம்பெண் தற்கொலை விவகாரம்-உறவினர்கள் போராட்டம்

இளம்பெண் தற்கொலை விவகாரம்-உறவினர்கள் போராட்டம்

-

பொன்னேரி அருகே  இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். 

இளம்பெண் தற்கொலை விவகாரம்-உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் – முத்துலட்சுமி தம்பதியரின் மகள் ஆர்த்தி என்கிற தனலட்சுமிக்கும் (20) சிறுவாக்கம் சானார்பாளையத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வருவதால் தன்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுமாறு பெற்றோருக்கு வாட்சப்பில் ஒலிசெய்தி அனுப்பிய நிலையில் பெற்றோரும் தனலட்சுமியை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு கணவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சேகர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமது மகளை பணம், நகை கேட்டு நச்சரித்து, தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்த கணவர் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பொன்னேரி போலீசார், சார் ஆட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் சாதகமான பதிலளிக்காததால் பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது மகளை கொடுமைப்படுத்தி கொன்ற கணவர் குடும்பத்தினரை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெற்று கொள்வோம் என கூறி கிராம மக்களும், உறவினர்களும் மேற்கொண்டுள்ள சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் மற்றும் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ