Homeசெய்திகள்சினிமாமலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்....'DD3' அப்டேட்!

மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்….’DD3′ அப்டேட்!

-

- Advertisement -

மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்....'DD3' அப்டேட்!தனுஷ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதன்படி கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு D50, D51, தேரே இஷ்க் மெயின் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதே சமயம் தனுஷ் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே கடந்த 2017 ராஜ்கிரண், ரேவதி ஆகியோரின் கூட்டணியில் வெளியான ப. பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார்.மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்....'DD3' அப்டேட்!

மேலும் தனுஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் வருண் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் DD3 படத்தின் கூடுதல் அப்டேட்டாக மலையாள நடிகை பிரியா வாரியர் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்....'DD3' அப்டேட்!மேத்யூ தாமஸ், லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் DD3 படத்தின் முக்கிய அப்டேட் நாளை டிசம்பர் 24 அன்று வெளியாக இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ