கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தையொட்டி, உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ‘புறநானூறு’…..ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக, வேளாங்கண்ணி நகர் முழுவதும் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்திற்காக, வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் நிறம் மாறும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் நகரமே ஒளி வெள்ளத்தில் காட்சியளிக்கிறது. பேராலயம் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் விளக்கு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ சிறப்பு பிரார்த்தனை, வேளாங்கண்ணி பேராலயத்தில் உள்ள சேவியர் திடலில் நடைபெறவுள்ளது. இதனிடையே, பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பெரும் வெள்ளத்தினால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!
இன்றிரவு நடைபெறவுள்ள பிரார்த்தனையில், மலையாளம், மராட்டியம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனையும், திருப்பலியும் நடைபெறவுள்ளது.