மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசை உதயநிதி வம்புக்கு இழுக்கிறார். தூத்துக்குடியில் மழை பாதிப்பை டிசம்பர் 20- ஆம் தேதி மத்தியக் குழு நேரில் ஆய்வுச் செய்தது. மத்தியக் குழு வந்த பிறகே டிசம்பர் 21- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்றார்.
நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. தமிழக அரசு சரியாகப் பணிகளை மேற்கொள்ளாததால் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு புயல் நிவாரணமாக குஜராத் மாநிலத்திற்கு ரூபாய் 9,836 கோடி கேட்ட நிலையில், ரூபாய் 1,000 கோடி தான் தரப்பட்டது. டிசம்பர் 26- ஆம் தேதி தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மழை, வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.