திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனவரி 02- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார்.
“35 காவல்துறை டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்”- காவல்துறை டி.ஜி.பி. உத்தரவு!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் சார்பில் விமான நிலையத்தை விரிவாக்கத் திட்டத்திற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதிநவீன வசதிகளுடன் கூடிய திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் ஜனவரி 02- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் திறந்து வைக்கவுள்ளார்.
“நிவாரணத்தை உயர்த்தி வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
இதையடுத்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.