கண்மாய் கரைகள், வேலியோரப் பகுதிகளில் வளரக்கூடிய கொடி வகை தான் அதலைக்காய். இவை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் விளையும் காய். எனவே இதனை காய வைத்து வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துவார்கள்.
தற்போது அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி பார்ப்போம்.
அதலைக்காய் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே விளையக் கூடியது. அதாவது விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை போன்ற பகுதிகளில் அதிகமாக கிடைக்கும். இந்தக் காயில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த காய் அதிகமாக மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இவை மூலிகை வகைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே தினமும் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதலைக்காய் மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் காமாலை இருப்பவர்கள் தினமும் இந்த காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனை சரியாகும்.
குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த காய் சிறந்த மருந்து தான். இதில் இருக்கும் சத்துக்கள் வயிற்றுப் பிரச்சனையை தீர்த்து வயிற்றில் காணப்படும் கிருமிகளை அழித்து குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுகிறது.
பாகற்காயை குழம்பாகவோ பொரியலாகவோ செய்து சாப்பிடுவது போல இந்த அதலைக்காயையும் சமைத்து சாப்பிடலாம்.
மேலும் சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
சாப்பிட்ட பின் எந்தவித ஒவ்வாமையும் இல்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.