Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

-

- Advertisement -

காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்க ஆமணக்கு பூச்சாறு, மணத்தக்காளி இலைச் சாறு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை காதில் விட காதில் உள்ள அழுக்குகள் வெளியேறும் அதே சமயம் கிருமிகளும் நீங்கும்.

சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒரு துளி தைவேளை இலைச்சாற்றை காதில் விட வேண்டும்.

சிறிதளவு பாலில் தூதுவளை இலைகளை ஊற வைத்து குடித்து வர காது வலி, காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

இரண்டு சொட்டு தூதுவளை சாற்றை காதில் விட காதில் இருக்கும் கட்டி சரியாகும்.

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவைகளுடன் பெருங்காயம் சிறிதளவு எடுத்து அதனை நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சல் சரியாகும்.

தோல் நீக்கிய சுக்கை எடுத்து அதனுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டு வந்தால் காது குத்தல் பிரச்சனை குணமடையும்.

கொன்றை வேர் பட்டை, முருங்கை வேர்ப்பட்டை ஆகியவற்றை எடுத்து அதனை கசக்கி இரண்டு துளிகள் சாற்றை காதில் விட காது செவிடு சரியாகும்.

தூதுவளை இலைகளை உண்பதால் காது மந்தம் தீரும்.காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

தூதுவளையை காய்ச்சி குடித்து வந்தால் காது வலி குணமாகும்.

அதேபோன்று நெல்லிக்காய் சாறு கரிசலாங்கண்ணி சாறு ஆகிய இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடியுடன் சேர்த்து தைலம் போன்று செய்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது வலி சரியாகும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ