Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 தொற்று உறுதி!

-

 

தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 தொற்று உறுதி!

டிசம்பர் 24- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், டிசம்பர் 24- ஆம் தேதி வரை நாடு முழுவதும் 63 பேருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கலகக்காரன் சார்லி சாப்ளின் நினைவு தினம்

கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலஙகானாவில் 2 பேருக்கும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், “தமிழகத்தில் ஜே.என்.1 வகை பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்கவில்லை. அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; எனினும், யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. லேசான அறிகுறிகளே உள்ளதால் பதற்றமடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ