தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் டன்கி திரைப்படம்…. ஷாருக்கானுக்கு கிடைத்த அங்கீகாரம்…
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெருமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலகக்காரன் சார்லி சாப்ளின் நினைவு தினம்
மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்காக நிவாரணப் பொருட்களை சிரமமின்றிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிகளில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.