நகைச்சுவை நடிகர் சதீஷ் நாய் சேகர் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதே சமயம் வித்தைக்காரன் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
அதைத் தொடர்ந்து கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து கலக்கி வருகிறார். இந்த படத்தில் சதீஷ் உடன் இணைந்து ரெஜினா, நா, சரண்யா பொன்வண்ணன், VTV கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி கலந்த ஹாரர் கதை களத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த டிசம்பர் 8ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
Sathish gifts Armani watch to #ConjuringKannappan director to celebrate the success.
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 25, 2023
இது குறித்து நடிகர் சதீஷ் சமீபத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் சதீஷ் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியருக்கு அர்மானி வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த வாட்சை நடிகர் சதீஷே இயக்குனருக்கு கட்டிவிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.