Homeசெய்திகள்அரசியல்"இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

“இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

-

- Advertisement -

 

"இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “செயலற்ற ஆட்சியாக உள்ளது தி.மு.க. அரசு; ஊழல் செய்வதில் தான் சாதனை செய்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பல பேர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அங்கே இருப்பார்கள். தி.மு.க. அரசுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது; தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

கொரோனாவில் இருந்து விலைமதிப்பில்லாத மக்களின் உயிரை காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. இளைஞர்கள், மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை உள்ளது. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அடுத்து என்ன தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.

“தி.மு.க.வின் சமூகநீதி வேஷம் கலைந்துவிட்டது”- அண்ணாமலை ட்வீட்!

பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தி.மு.க. அரசு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ