ஹரிஷ் கல்யாணின் “பார்க்கிங்” திரைப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். வழக்கமான கதைகளுக்கு மாற்றாக வித்தியாசமான பாதையில் பயணிக்கும் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பார்க்கிங்.
இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் சேரந்து இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதனால் ஏற்படும் ஈகோ கிளாஸ் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை மையக்கருவாக கொண்டு இப்படம் வெளியானது.
இத்திரைப்படம் வெளியான நாள் முதலே பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வந்தது. வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால், சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக இப்படத்தின் வசூல் பாதிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பார்க்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 30-ம் தேதி பார்க்கிங் படம் ஹாட்ஸாடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.