தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தனுஷை இயக்க பல இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இந்நிலையில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இத்திரைப்படம் 2024 பொங்கல் தினத்தில் வெளியாக போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா 2024 ஜனவரி 3ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 3 அன்று சென்னை நேரு அரங்கத்தில் மிகப்பிரமாண்டமாக இந்த ஆடியோ லான்ச் நடைபெற இருக்கிறது. அதற்கான பாஸ்களும் தயாராகி விட்டதாம். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை பிரபல சன் டிவி தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.