Homeசெய்திகள்சினிமாமீளா துயரத்தில் தமிழகம்.... விடை பிரிந்தார் விஜயகாந்த்.... நினைவலைகள் சில!

மீளா துயரத்தில் தமிழகம்…. விடை பிரிந்தார் விஜயகாந்த்…. நினைவலைகள் சில!

-

மீளா துயரத்தில் தமிழகம்.... விடை பிரிந்தார் விஜயகாந்த்.... நினைவலைகள் சில!மதுரையின் மைந்தனாக 1952ல் பிறந்தவர் விஜயகாந்த். இவருடைய உண்மையான பெயர் விஜயராஜ் என்பதாகும்.  சினிமா பின்புறம் ஏதும் இல்லாமல் தன் திறமையை நம்பி மட்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இனிக்கும் இளமை எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் படிப்படியாக தன்னுடைய தீவிர உழைப்பினாலும் திறமைினாலும் டாப் ஹீரோவாக வளர்ந்தார். இதுவரை கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமா துறையில் கடைநிலை தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் உச்ச நட்சத்திரம் வரை அனைவரையும் சமமாக மதித்து நடந்தவர். விஜயகாந்த் நடித்த நூறாவது படமான “கேப்டன் பிரபாகரன்” படத்திலிருந்து இவரை அன்புடன் கேப்டன் என ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
2001 ஆம் ஆண்டின் சிறந்த இந்திய குடிமகன் விருதை பெற்றார். நல்ல நடிகனாக மட்டுமின்றி நல்ல அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு தேசிய திராவிட முற்போக்கு கழகம் கட்சியை தொடங்கினார். 2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். பாரம்பரியமிக்க இரு பெரும் கட்சிகள் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காலத்தில் இவர் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்து தமிழக அரசியலையே சற்று ஆட்டம் காண வைத்தார். யார் கண் பட்டதோ தெரியவில்லை, உடல் நலக்குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதனால் முன்பிருந்தது போல விஜயகாந்த்தால் கம்பீரமாக இருக்க முடியாமல் போனது. அவருடைய உடல் பிரச்சினைகள் தெளிவான வார்த்தை உச்சரிப்புகளை பயன்படுத்த முடியாமல் போனது. இதனை இணையவாசிகள் மீம்ஸ்களாக மாற்றியும், விஜயகாந்தை தொடர்ந்து கேலி செய்து வந்தனர். தன் உடல் நலக்குறவையும் பொருட்படுத்தாது தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் விஜயகாந்த்.மீளா துயரத்தில் தமிழகம்.... விடை பிரிந்தார் விஜயகாந்த்.... நினைவலைகள் சில!

புரட்சிக் கலைஞர் என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான கருத்துக்களை தன் படங்களில் தொடர்ந்து கூறி வந்தார். இவருடைய பெரும்பாலான படங்கள் சமூகம் பேசும் அரசியல் பேசும் கதையாகவே இருக்கும். தனது கம்பீரமான குரலினாலும் நடையினாலும் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார் விஜயகாந்த். ஆக்சன் படங்கள் ஆனாலும் சரி சென்டிமென்ட் படங்கள் அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். சினிமாவில் விஜயகாந்த் சண்டையிடும் காட்சிகள் வந்தால் ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கும். அந்த அளவில் இவரின் கர்ஜிக்கும் குரல் வான் வரை எதிரொலிக்கும். இவருடைய ரமணா, சேதுபதி ஐபிஎஸ், வானத்தைப்போல, சொக்கத்தங்கம் போன்ற படங்கள் இன்றளவும் பலரின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாகும்.

அந்த வகையில் சினிமா துறை நல்ல நடிகர்கள் பலரை பார்த்ததுண்டு, ஆனால் இவரைப் போல நல்ல மனிதரையும் பார்த்துள்ளது என்பது ஆச்சரியத்துக்குரியது .பொது நலமே சுயநலமாக வாழ்ந்து வந்த மனிதர் விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லை என்பது ஏற்றுக்கொள்ள கடினமான உண்மை. தொடர்ந்து அவருடைய உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் இவரால் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாமல் போனது. நரம்பியல் தொடர்பான பிரச்சனையால் சரிவர பேச முடியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இவர் மீது கொண்ட அன்பும் துளியளவும் குறையவில்லை.மீளா துயரத்தில் தமிழகம்.... விடை பிரிந்தார் விஜயகாந்த்.... நினைவலைகள் சில!

உடல் நலப் பிரச்சினையால் நவம்பர் மாதத்தில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அதைத் தொடர்ந்து 20 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனைகளையும் வழிபாடுகளையும் செய்து வந்தனர். ரசிகர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் விதத்தில் அவர் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பிலும், தேமுதிக நிர்வாகத்தின் சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார் விஜயகாந்த். இந்நிலையில் நேற்றைய முன் தினம் சாதாரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வென்டிலேட்டர் சிகிச்சை அவருக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.மீளா துயரத்தில் தமிழகம்.... விடை பிரிந்தார் விஜயகாந்த்.... நினைவலைகள் சில!

இந்நிலையில் தான் 71 வயதுடைய விஜயகாந்த் இன்று காலை மருத்துவமனையிலேய உயிரிழந்தார். இந்த துக்கமான செய்தி அவருடைய ரசிகர்களையும் தொண்டர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியன் மறைந்த பின்னும் தன் ஒளியை நிலவுக்கு வழங்குவது போல இவரை பின்பற்றும் பலருக்கும் ரோல் மாடலாக, ஆசனாக, வழிகாட்டியாக வாழ்ந்த இவரை கோடி மடல்கள் எழுதி நினைவுகூர்ந்தாலும் அவை போதாது.

MUST READ