Homeசெய்திகள்சினிமாகேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இந்தி, தெலுங்கு நடிகர்கள் இரங்கல்

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இந்தி, தெலுங்கு நடிகர்கள் இரங்கல்

-

- Advertisement -
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் நடிகர், நடிகைகள் மட்டுமன்றி இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் தனது 71-வது வயதில் சென்னையில் உயிரிழந்தார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்த ரசிகர்கள், தேமுதிக தொண்டகர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். ரஜினி, கமல், தொடங்கி அனைத்து முன்னணி நடிகர்களும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 80 மற்றும் 90-களில் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றி நடிகர், நடிகைகளும் அவரது மறைவுக்கு இரங்கல் கூறி செய்தி பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி உள்பட மற்ற மொழி நடிகர்களும் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்து இதயம் நொறுங்கிப் போனதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளர், பன்முகத் திறமை கொண்டவர், புத்திகூர்மையான அரசியல்வாதி விஜயகாந்த் என சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூறியுள்ளார். எனது முதல் படமான கள்ளழகர் லெஜெண்ட் விஜயகாந்தின் பரிசு. எனது திரைப்பயணத்தில் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என படக்காட்சியை பகிர்ந்து நடிகர் சோனுசூட் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

MUST READ