Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!

விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!

-

 

விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி!

அதேபோல், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறி, மறைந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் விஜயகாந்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கேப்டன் விஜயகாந்த் பெற்ற விருதுகள்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரிவேந்தர் எம்.பி., “குழந்தை போன்ற மனம் கொண்டவர் விஜயகாந்த். விஜயகாந்தின் மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ