Homeசெய்திகள்க்ரைம்குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

-

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை தொடர் விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நலப் பணிகள் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை டீ கடை, மளிகை கடை, சிறு கடைகளில் விற்பனை செய்து வந்ததை காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிரடி சோதனை மேற்கொண்டு போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

இதன் தொடர்ச்சியாக அதிரடி சோதனையில் மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1) செந்தில் குமார் ஆ/44 த/பெ லோகநாதன், நெ.51, 2வது தெரு. தெற்கு காமாட்சி நகர், மாங்காடு, சென்னை – 122,  2) பிரதாப்சிங் க்ரிஸ்டோபர் ஆ/34 த/பெ கோவில் துரை. நெ.108/3. பஜார் தெரு, பூச்சி அத்திபேடு, திருவள்ளுர் மாவட்டம்,  3) ஜெயபாலன் ஆ/41 த/பெ குணசேகர பாண்டியன், நெ.G2.முதல் குறுக்கு தெரு, JP நகர், புத்தகரம், சென்னை 66 ஆகிய மூன்று குற்றவாளிகளும் தொடர்ச்சியாக குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தும், விநியோகம் செய்தும் பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் குற்றவாளிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையில் போதைப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் சமுதாயத்தில் இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ