விஜய் நடிக்கும் 68-வது படத்தின் முதல் தோற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோலிவுட் திரை உலகின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது நடிப்பில் அண்மையில் வௌியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 68-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. அண்மையில் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி, அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் இன்று மாலை வெளியாகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.