விஷால் நடிப்பில் உருவாகும் ரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் கடைசியாக நடித்த திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஹரி, விஷால் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்திற்கு ரத்னம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பட குழுவினர் ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டு அறிவித்திருந்தனர். மிரட்டலாக வெளியான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். இந்த படம் மெடிக்கல் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (01.01.2024) காலை 7 மணி அளவில் ரத்னம் படத்தின் ” வாராய் ரத்னம்” எனும் முதல் பாடல் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.