Homeசெய்திகள்சினிமாதிடீரென மரணம் அடைந்த பிரபல சீரியல் நடிகர்.... அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!

திடீரென மரணம் அடைந்த பிரபல சீரியல் நடிகர்…. அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!

-

திடீரென மரணம் அடைந்த பிரபல சீரியல் நடிகர்.... அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடர்களில் மிக முக்கியமான தொடர் “கனா காணும் காலங்கள்“. பலருடைய பள்ளி நினைவுகளை இந்த சீரியல் நினைவு படுத்தியது. இந்தத் தொடரில் இடம் பெற்ற தல, சைனீஸ், பச்சை, பிளாக் பாண்டி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மனது நீங்காமல் இடம் பிடித்தவை. இவர்கள் மட்டுமின்றி இந்த சீரியலில் ஆசிரியராக நடித்த “அன்பழகன்” வாத்தியார் கதாபாத்திரத்தையும் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. இதைத்தொடர்ந்து இவர் பல சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் கண்டிகைப் பகுதியை பூர்வீகமாக கொண்டவர். திடீரென மரணம் அடைந்த பிரபல சீரியல் நடிகர்.... அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!நேற்று இரவு ஏற்பட்ட உடல் நலக்குறைவனால் திடீரென காலமானார். புத்தாண்டு  சமயத்தில், இந்த துக்க செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் அன்பழகனின் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த 2023 ஆம் ஆண்டில் பல திரைப் பிரபலங்களை நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ