நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிருந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து விஷால் தனது 34வது படமான ரத்னம் படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கௌதம் வாசுதேவ் மேனன் சமுத்திரக்கனி யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படம் சம்பந்தமாக வெளியாகும் அடுத்தடுத்து அப்டேட்களை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் அனிமேஷன் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர். மிரட்டலாக வெளியான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.
Here we go, proudly presenting #VaaraiRathnam & #RaRaRathnam – the first shot lyrical video from #Rathnam
Tamil – https://t.co/Os1yledAFa
Telugu – https://t.co/sGg9j7aBPIA film by #Hari. Coming to theatres, summer 2024 & a @ThisisDSP musical. @priya_Bshankar…
— Vishal (@VishalKOfficial) January 1, 2024
இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபில்ம்ஸ் நிறுவனம் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று ரத்தினம் படத்தின் வாராய் ரத்னம் எனும் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது இதனை விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பாடலை செண்பகராஜ் பாடியுள்ள நிலையில் விவேகா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.