Homeசெய்திகள்இந்தியாவணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!

-

 

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விலை அதிரடியாக குறைப்பு!
File Photo

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைத்து, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!

19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 4.50 குறைந்து, ரூபாய் 1,924.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் 1,929- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை சொற்ப அளவுக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 22- ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைக்கப்பட்ட நிலையில், ரூபாய் 4.50 இன்று (ஜன.01) குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக் கொண்ட சிலிண்டரின் விலை ரூபாய் 918.50- க்கு நீடிக்கிறது.

பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்…..கைதானதால் பரபரப்பு!

14.2 கிலோ எடைக் கொண்ட சிலிண்டரின் விலை 2023 மார்ச் மாதத்திற்கு பின், விலை மாற்றமின்று அதே விலையில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ