ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் (வயது 37) அறிவித்துள்ளார்.
‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து’…. நடிகர் கமல்ஹாசன்!
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள வார்னர், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெற்றார். 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் 6,932 ரன்களைக் குவித்துள்ளார் டேவிட் வார்னர்.
நடப்பாண்டில் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான டேவிட் வார்னர், அந்த அணிக்கு பக்க பலமாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்…..கைதானதால் பரபரப்பு!
ஓய்வு குறித்த அறிவிப்பை இன்று (ஜன.01) வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், “சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்; தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை இனி செலவிடவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.