தொடர் விடுமுறை முடிந்து, அதிகளவில் மக்கள் சென்னை திரும்பியதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!
பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்!
இதனிடையே, அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, இன்று (ஜன.02) தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டன.