மலையாளத்தில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து காதல் தி கோர் திரைப்படமும் வெளியானது. மம்மூட்டி, ஜோதிகா கூட்டணியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும் மம்மூட்டி பிரம்மயுகம் எனும் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கின்றன.
அதைத்தொடர்ந்து மம்மூட்டி டர்போ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கடந்த 2016 இல் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் திரைப்படத்தை இயக்கிய வியாஷக் இயக்குகிறார். ஜஸ்டின் வர்கீசின் இசையிலும் விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று 2024 புத்தாண்டு தினத்தன்று டர்போ பட குழுவினர்களுடன் நடிகர் மம்முட்டி புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.