Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர்!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர்!

-

 

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர்!

ரூபாய் 1,112 கோடி மதிப்பிலான திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார்.

பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரலாம். புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 750 கார்கள், 200 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. புறப்பாடு, வருகை என 16 வழிகள் உள்ளன; 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க நவீன கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு நட்சத்திர புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விமான நிலைய முனையம் இதுவாகும்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலைநுட்பங்கள் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திறப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கே.என்.நேரு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ