Homeசெய்திகள்சினிமாஇயக்குநர் சேரனுக்கு ஜிம் பயிற்சியாளராக இருந்தேன்... மாறுபட்ட கதைகளை திரைக்கு கொண்டுவருபவர் - நடிகர் ஆரி

இயக்குநர் சேரனுக்கு ஜிம் பயிற்சியாளராக இருந்தேன்… மாறுபட்ட கதைகளை திரைக்கு கொண்டுவருபவர் – நடிகர் ஆரி

-

 

நடிகரும் இயக்குநருமான சேரன், கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின்னர், இவர் பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநாரகவும், எழுத்தாளராகவும் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து அவர் பொற்காலம், ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார், கடந்த 2019-ல் வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை இவர் கடைசியாக இயக்கி இருந்தார். பிக் பாஸ் சீசன் 3யிலும் பங்கேற்றார். நல்ல கதையம்சமும் கருத்தும் உடைய படங்களை தேர்ந்தெடுத்து அவ்வப்போது நடித்து வருபவர் சேரன்.சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் குடிமகன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே, சேரன் இயக்கி உள்ள வெப் தொடர் ஜர்னி. சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக சேரன் இந்த வெப் சீரிசை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான படப்பிடிப்புகள் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கொண்டுள்ள இந்த வெப் சீரிஸில் விவசாயம் தொடர்பான ஒரு எபிசோடு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜூனன், திவ்ய பாரதி, நரேன், மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் வரும் ஜனவரி 12-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், வெப் சீரிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ஆரி, இயக்குநரும் நடிகருமான சேரனுக்கு நான் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளேன். அப்போது முதல் அவரது படைப்புகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகர். மாறுபட்ட கதைகளை திரையில் கொண்டு வருபவர் என நடிகர் ஆரி புகழாரம் சூட்டினார்.

MUST READ