Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் 'ப்ளூ ஸ்டார்'..... ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் ‘ப்ளூ ஸ்டார்’….. ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் ப்ளூ ஸ்டார்..... ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், ஓ மை கடவுளே, தெகிடி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். சில மாதங்களுக்கு முன்பு அசோக் செல்வன், சரத்குமார் கூட்டணியில் வெளியான போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் வெளியான சபாநாயகன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேசமயம் சாந்தனு நடிப்பில் கடைசியாக ராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அசோக் செல்வனும் , நடிகர் சாந்தனு பாக்யராஜும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் ப்ளூ ஸ்டார்..... ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!இப்படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க எஸ். ஜெயக்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் குறித்த கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ