Homeசெய்திகள்தமிழ்நாடு"வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்"- ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தல்!

“வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்”- ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 09- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நல இணை ஆணையர் மற்றும் நிதித்துறைச் செயலாளர், போக்குவரத்துத்துறைச் செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கத்தினரை அழைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் ‘ப்ளூ ஸ்டார்’….. ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசும், போக்குவரத்து நிர்வாகமும் பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திடும் வகையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

MUST READ