Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதே சமயம் கதாநாயகனாகவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். போட், வானவன், பூமர் அங்கிள், மேகி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் யோகி பாபு. மேலும் நயன்தாராவுடன் இணைந்து மண்ணாங்கட்டி படத்திலும், வாணி போஜன் உடன் இணைந்து சட்னி சாம்பார் எனும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியாக நடித்து வரும் யோகி பாபு, டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள தூக்குதுரை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிகை இனியா, மொட்ட ராஜேந்திரன், சென்ட்ராயன், மறைந்த நடிகர் மாரிமுத்து பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஓபன் கேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரவி வர்மா ஒளிப்பதிவு செய்ய கே எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார். யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியுள்ள தூக்குதுரை படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ