தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்து யூட்யூப் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவருடைய வீடியோக்களில் அநாகரீகமாக பேசுவதாக சிலர் இவர் மீது குற்றம் சாட்டினர். அதேசமயம் இவருடைய வெள்ளந்தியான பேச்சுக்கு பல ரசிகர்களும் இருந்தனர். பின்னர் படிப்படியாக பிரபலம் அடைந்து சில திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். பிக் பாஸ் 6ம் சீசனிலும் போட்டியாளராக பங்கேற்று பின் வெளியேறிச் சென்றார். தொடர்ந்து சில தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 28 அன்று கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியின்றி இறந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தார் ஜி.பி.முத்து. இந்த செய்தி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
சில காரணங்களால் அவரால் நேரில் வர முடியாமல் போனது. இருப்பினும் விஜயகாந்த் மீது கொண்ட அன்பினால் நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் சென்று கண்ணீர் மல்க கதறித் துடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பொதுமக்களும் திரைப் பிரபலங்களும் நாள்தோறும் சென்று மலர்கள் தூவி பூஜை செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- Advertisement -