Homeசெய்திகள்சினிமாமெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ்..... பிறந்தநாள் சிறப்பு பதிவு!

மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ்….. பிறந்தநாள் சிறப்பு பதிவு!

-

மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ்..... பிறந்தநாள் சிறப்பு பதிவு!தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இசைப்பிரியர்களின் டாப் 10 ஃபேவரிட் பாடல்களின் பட்டியலை எடுத்தால் நிச்சயமாக இவருடைய பாடல் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவுக்கு 90ஸ் கிட்ஸ் இன் பிளேலிஸ்ட்டை ஆட்சி செய்தவர். தன்னுடைய தொடக்க காலத்தில் ஏ.ஆர். ரகுமான், கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களுடன் கீபோர்டு வாசிக்கும் கலைஞனாகப் பணியாற்றியுள்ளார். பின்னர் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தன்னுடைய இசை ஒளியால் மின்னினார். முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃப்லிம் ஃபேர் அவார்ட் வாங்கினார். அதற்கு முன்னதாக தொடர்ந்து 9 ஆண்டுகள் ஏ ஆர் ரகுமான் தான் ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றவர். மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ்..... பிறந்தநாள் சிறப்பு பதிவு!அந்தச் சங்கிலியை உடைத்து அறிமுகப் படத்திலேயே ஃபிலிம் ஃபேர் விருது வென்ற பெருமை ஹாரிஸ் ஜெயராஜுக்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. குறிப்பாக அது என்ன மாயமோ தெரியவில்லை ஹாரிஸ் ஜெயராஜும் கௌதம் வாசுதேவ் மேனனும் கூட்டணி அமைத்து விட்டால் ஒரு மேஜிக் நிகழ்கிறது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு,வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் இருவரும் இணைந்து இசை மேஜிக்கை நிகழ்த்தினர். விக்ரம், சூர்யா, விஜய் என ஒவ்வொருவருக்கும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ்..... பிறந்தநாள் சிறப்பு பதிவு!2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி வருதையும் பெற்றுள்ளார். திரைத்துறையில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்வில் உதவி தேவைப்படும் மக்களுக்கும் அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். இத்தகைய பெருமைமிகு இசைக்கலைஞன் இன்று அவருடைய 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ