Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!

சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!

-

சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!சப்பாத்திக்கள்ளி பழங்களில் அதிக மருத்துவ குணங்கள் இருந்திருக்கின்றன. அதேசமயம் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.

உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழங்கள் பயன்படுகிறது.

ரத்த அழுத்தம் அதிகமாகாமல் பாதுகாக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் இவை பயன்படுகிறது. உடல் சோர்வை குறைக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் நோய்க்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழத்தினை நெருப்பில் வாட்டி கொடுப்பதனால் விரைவில் குணமாகும்.

சப்பாத்திக்கள்ளியின் பசையை வீக்கம் இருக்கும் பகுதிகளில் பூசி வந்தால் விரைவில் சரியாகும். அக்குள், கழுத்துப் பகுதிகளில் உண்டாகும் கட்டிகளுக்கும் இவை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.சப்பாத்திக்கள்ளி பழங்களின் அற்புத குணங்கள்!

மேலும் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நீர்க்கட்டி, கருமுட்டை வளர்ச்சியின்மை, மாதவிடாய் பிரச்சனைகள், கருச்சிதைவு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இந்த சப்பாத்திக்கள்ளி பழம் பயன்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருமுட்டை வளர்ச்சி சீரடையும். குழந்தை பெற வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும்.

வைரஸ் காய்ச்சலால் உண்டாகும் பித்தப்பை வீக்கத்தினை சரி செய்ய சப்பாத்திக்கள்ளி பணத்தை கொடுத்தால் உடனடியாக குணமடையும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ