Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் அன்னபூரணி படத்தின் மீது வழக்கு

நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் மீது வழக்கு

-

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, படத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோலிவுட்டி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. சினிமா மட்டுமன்றி தொழில்துறை, குடும்பம், குழந்தைகள் என அனைத்திலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிக்கும் பட்சத்தில், மற்றொரு பக்கம் பல தொழில்களில் அவரும், அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி நயன்தாரா நடித்துள்ள படம் அன்னபூரணி.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நயன்தாரா, ஜெய், சத்யராஜ் இவர்களின் கூட்டணி ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. மேலும் அன்னபூரணி திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த மாதம் 1-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸிலும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலாங்கி என்பவர், இந்தப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டி மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

MUST READ