Homeசெய்திகள்சினிமாஇந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமா?.... சொல்லவே இல்ல!

இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமா?…. சொல்லவே இல்ல!

-

இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமா?.... சொல்லவே இல்ல!நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவருடைய படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடப்பவர் தான் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஏலியன் ஒன்றை மையமாக வைத்து சயின்ஸ் ஃபிக்ஸன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது.இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமா?.... சொல்லவே இல்ல!

இந்நிலையில் அயலான் படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு ஏலியன் சம்பந்தமான கதைக்களத்தில் PAUL எனும் ஹாலிவுட் படம் வெளியானது. இந்த PAUL படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியனும் அயலான் படத்தில் உள்ள ஏலியனும் அச்சசலாக ஒற்றுமையாக இருக்கிறது. அதனால் அயலான் படம் PAUL படத்தின் தழுவலாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் கடந்த 2008 இல் வெளியான CJ7 எனும் சைனீஸ் படத்தின் தழுவலாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ