Homeசெய்திகள்சினிமாசிங்கப்பூர் சலூன் பட இயக்குனரின் புதிய படம்....ஆக்சன் அவதாரம் எடுக்கும் விஷ்ணு விஷால்!

சிங்கப்பூர் சலூன் பட இயக்குனரின் புதிய படம்….ஆக்சன் அவதாரம் எடுக்கும் விஷ்ணு விஷால்!

-

இயக்குனர் கோகுல் இயக்கும் புதிய படம்...ஆக்சன் அவதாரம் எடுக்கும் விஷ்ணு விஷால்!வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக இயக்குனர் கோகுலுடன் கைகோர்க்க உள்ளார். ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியுள்ளார் கோகுல். மேலும் ஆர்.ஜே பாலாஜியை ஹீரோவாக வைத்து இவர் இயக்கியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் கோகுல் இயக்கும் புதிய படம்...ஆக்சன் அவதாரம் எடுக்கும் விஷ்ணு விஷால்!இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக விஷ்ணு விஷாலை ஆக்சன் ஹீரோவாக களம் இறக்க உள்ளாராம் கோகுல். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் விஷ்ணு விஷால் அவரே தயாரித்து நடிக்க உள்ளார். பரபரப்பான ஆக்சன் படமாக உருவாக உள்ள இப்படம் அதிக பொருட்செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும். விஷ்ணு விஷால் ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் கோகுல் இயக்கும் புதிய படம்...ஆக்சன் அவதாரம் எடுக்கும் விஷ்ணு விஷால்!அதே சமயம் ராட்சசன் பட இயக்குனருடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். மேலும் மோகன்தாஸ் போன்ற இன்னும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். எனவே இப்படங்களுக்கு பின்னர் புதிய படத்தின் வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ