ஆவடி பேருந்து பணிமனையில் மக்களிடம் குறைகளை கேட்டு பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்
ஆவடி, அம்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 99 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா தொழிற்சங்கத்தினர், சிஐடியு தொழிலாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் பயணிகளின் பயணம் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காக ஆவடி பணிமனையில் நேரில் சென்று கிளை மேலாளரிடம் கலந்தாய்வு செய்து, பேருந்து இயக்கங்களை பார்வையிட்டு பின் பொதுமக்களிடம் பேருந்துகள் முறையாக இயங்குகிறதா என்று கேட்டு அறிந்தார்.
ஆவடி, அம்பத்தூர் பேருந்து பணிமனையிலிருந்து வழக்கமாக ஆவடியில் இருந்து
145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 144 பேருந்துகள் இயக்கப்பட்டது. அம்பத்தூரில் 136பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.இதுவரை வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் இயக்கபட்டு வருகிறது. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பேருந்து இயங்கி வருகிறது.
வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் பணிமனையில் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து பணிமனை ஆய்வு செய்த பின் செய்தியாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் பேட்டி…
ஆவடியில் பேருந்துகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயல்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் எந்த சிரமமும் இன்றி பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரின் செயல்பாட்டாலும் பேருந்துகள் இயல்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என தெரிவித்தார்.