சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள Oyo விடுதியில் வாஞ்சிநாதன் மற்றும் லோகேஷ் இருவரும் அறை எடுத்து தங்கி மது அருந்தி உள்ளனர். போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே வாஞ்சிநாதன் லோகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் உடல்களை கைப்பற்றி நொளம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அம்பத்தூரை சேர்ந்த வாஞ்சிநாதன் தனக்கு திருமணம் நிச்சயமான நிலையில் லோகேஷியிடமிருந்து நெருக்கம் காட்டுவதை தவிர்த்து உள்ளார். ஆனால் லோகேஷின் தொல்லை அதிகமானதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து நேற்று இரவு கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நொளம்பூர் காவல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு லோகேஷ் காணவில்லை எனவும், மேலும் நேற்று இரவு அம்பத்தூர் காவல் நிலையத்தில் வாஞ்சிநாதன் காணவில்லை எனவும் குடும்பத்தார் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது ஒருவர் கொலை செய்தும் மற்றொருவர் தூக்கிலிட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.