பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி 08- ஆம் தேதி அங்குள்ள புனித லூர் மாதா ஆலயத்தில் இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது, அண்ணாமலை கோயில் உங்கள் பெயரில் இருக்கிறதா? என்னை தடுக்க உரிமை இருக்கா? எனவும், இங்கு வந்து 10,000 பேருடன் தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டு மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!
இந்த புகாரைப் பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மீது பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசுவது, வெறுப்புணர்வை உருவாக்கும் வகையில் பேசுவது என 153A (1), 504, 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுச் செய்துள்ளனர்.