மணிப்பூரில் இருந்து யாத்திரைத் தொடங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
வரும் ஜனவரி 14- ஆம் தேதி மணிப்பூரில் இருந்து ‘பாரத் ஜோடோ நியாய’ யாத்திரையைத் தொடங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு மணிப்பூர் மாநில அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2022- ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு அவர் யாத்திரை செல்லவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
மணிப்பூரில் இருந்து யாத்திரையைத் தொடங்க அம்மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பேலஸ் கிரௌண்ட் பகுதியில் இருந்து வரும் ஜனவரி 14- ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரைச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!
குறைந்த எண்ணிக்கையிலான கூட்டத்துடன் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.