பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே.
வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கும், ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். அதேபோல், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதற்கான பயண டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ (அல்லது) தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரைத் தொடங்க அனுமதி!
பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.