Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!

ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!

-

ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!கல்யாண முருங்கை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கல்யாண முருங்கை இலை – ஒரு கைப்பிடி அளவு
சீரகம் – 10 கிராம்
சாம்பார் வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
அரிசி மாவு – 1/4 கிலோ
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கல்யாண முருங்கை அடை செய்வதற்கு முதலில் கல்யாணம் முருங்கை இலையை சீரகத்துடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை அரிசி மாவுடன் மிக்ஸ் செய்ய வேண்டும்.

அத்துடன் சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிய இரண்டையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது தோசை கல்லில் எண்ணெய் தடவி அடை போன்று சுட்டு எடுக்க வேண்டும்.ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!

இந்த கல்யாண முருங்கையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதை ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது. அதே சமயம் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த கல்யாண முருங்கை உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் தோல் நோயை குணப்படுத்தவும் மாதவிடாய் வலியை குறைக்கவும், காது வலியை சரி செய்யவும் கல்யாண முருங்கை இலை பயன்படுகிறது.

எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிடலாம்.

MUST READ