அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?
ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தியில் AI தொழில் நுட்பத்தில் இயங்கும் நவீன கேமராக்கள் கண்காணிப்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து மாற்றம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பது என ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அயோத்தியில் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக கோயில் அமைந்துள்ள பகுதியில் 1,500 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக கண்காணிப்புத் தேவைக்கப்படும் 10,000- க்கும் அதிகமான இடங்களில் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!
அந்த கேமராக்களில் சந்தேக நபர்கள், தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த தரவுகளின் அடிப்படையில் எச்சரிக்கைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்கவிடுவது முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ள நிலையில், ‘ANTI’ ட்ரோன் அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.