Homeசெய்திகள்சினிமாஇந்தி தெரியாது போயா.... கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா'.... அசத்தலான டீசர் வெளியீடு!

இந்தி தெரியாது போயா…. கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’…. அசத்தலான டீசர் வெளியீடு!

-

இந்தி தெரியாது போயா.... கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா'.... அசத்தலான டீசர் வெளியீடு!நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2000 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் பல்வேறு மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகையர் திலகம் திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு மாபெரும் வெற்றியை தந்தது. அதைத் தொடர்ந்து பெங்குயின், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்னும் திரைப்படத்திலும் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஃபேமிலி மேன் வெப் சீரிஸுக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது சுமன் குமார் இயக்கியுள்ள ரகு தாத்தா படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. யாமினி யாக்னமூர்த்தி இதற்கு ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், சமூகத்தில் தனக்கான உரிமைக்காக போராடும் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீசர் முழுவதுமே இந்தி திணிப்பை எதிர்ப்பது போலவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசரில் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ