பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் செல்லும் பேருந்துகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்…. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!
திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலிக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, வடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, சேலம் வேளாங்கண்ணி, நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து TNSTC பேருந்துகள் இயக்கப்படும்.
நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்
தாம்பரம், கே.கே.நகரில் இருந்து செல்லும் பேருந்துகள்!
விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டிக்கு தாம்பரம் மெப்ஸில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு கே.கே.நகரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம், பூந்தமல்ல வழியாக செல்லும் பேருந்துகள்!
செங்குன்றம் வழியாக திருப்பதி, பென்னேரி, ஊத்துக்கோட்டைக்கு மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதிக்கு பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரிக்கு பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கேப்டன் மில்லர் அருமையான படைப்பு’…. படக்குழுவினரை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!
கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்!
மார்த்தாண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவனந்தபுரம், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோவை ஆகிய இடங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து SETC பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.