Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?..... தீயாய் பரவும் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?….. தீயாய் பரவும் புகைப்படம்!

-

பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?..... தீயாய் பரவும் புகைப்படம்!விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியல்களை விட டிஆர்பி யில் முதலிடம் பிடிப்பது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ரியாலிட்டி ஷோ என்பதால் சண்டை, சச்சரவு, கலேபரம் அனைத்தும் இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் 6 சீசன்களும் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டு அவர்களும் தொடர்ந்து விளையாடி வந்தனர். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே சூட்டிங் நடைபெற்றது. அதன்படி பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்று அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதேசமயம் டைட்டிலை தட்டித் தூக்கப் போவது மாயாவா? அர்ச்சனாவா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த அளவிற்கு இந்த சீசனில் பல சுவாரசியங்களும் ட்விஸ்டுகளும் இருந்தது.

தற்போது இந்த சீசனில் இறுதி போட்டியாளர்களாக மாயா, மணி, தினேஷ், விஷ்ணு, அர்ச்சனா உள்ளிட்ட ஐந்து பேர் விளையாடுகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?..... தீயாய் பரவும் புகைப்படம்!இந்நிலையில் இதன் டைட்டிலை தட்டி தூக்கியது விஜே அர்ச்சனா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தின் மூலம் ரன்னர் அப்பாக மணி இடம் பிடித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. மேலும் டைட்டிலை வென்றதற்காக அர்ச்சனாவிற்கு 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணி அளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ