Homeசெய்திகள்தமிழ்நாடுமகரவிளக்கு பூஜை- சபரிமலைக்கு சிறப்பு ரயில்!

மகரவிளக்கு பூஜை- சபரிமலைக்கு சிறப்பு ரயில்!

-

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலைச் செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலைச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ஜனவரி 16- ஆம் தேதி அன்று காலை 03.00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06032), அன்றைய தினம் இரவு 09.00 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ஜனவரி 16- ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06031), ஜனவரி 17- ஆம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

அதேபோல், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ