Homeசெய்திகள்சினிமாரத்தத்தில் அபிஷேகம் செய்த மகேஷ் பாபு ரசிகர்... இணையத்தில் விளாசும் நெட்டிசன்கள்... ரத்தத்தில் அபிஷேகம் செய்த மகேஷ் பாபு ரசிகர்… இணையத்தில் விளாசும் நெட்டிசன்கள்…
தெலுங்கு திரையுலகின் முனிசூட மன்னனாக இருப்பவர் மகேஷ் பாபு. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கடைசியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வௌியாகி ரசிகர்ளிடையே வரவேற்பை பெற்றது. இதில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தைத் தொடர்ந்து மகேஷே் பாபுவின் அம்மா தவறினார். தொடர்ந்து மகேஷ் பாபு வீட்டில் அப்பா, அம்மா மற்றும அண்ணா இறந்ததால் பெரும் சோகத்தில் மூழ்கினார் மகேஷ் பாபு.
இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய திரைப்படம் குண்டுர் காரம். இது மகேஷ் பாபுவின் 28-வது படமாகும். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகியுள்ளார். இந்த கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறது. இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது கையை அவர் பிளேடால் அறுத்து ரத்தத்தால் மகேஷ் பாபு கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நிலையில், அவருக்கு எதிராக இணையவாசிகள் விளாசி வருகின்றனர்.