இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளும் உடனடியாக தங்களின் Fast tagகளுக்கான KYCயை அப்டேட் செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் KYC கணக்குகள் முடக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறையில் தான் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 98 சதவீத வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கார்டுகள் பொருத்தப்பட்டு, கிட்டத்தட்ட எட்டு கோடிக்கும் அதிகமான ஃபாஸ்ட் டேக் கார்டுகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
பண வசூல் முறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் காரணத்தால் வாகன ஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் வேகமாக பணம் வசூல் செய்ய இந்த ஃபாஸ்ட் டேக் கார்டு முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இருந்த போதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் முறை வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர்கள் இரண்டு அல்லது மூன்று பாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி அதனை மாற்றி மாற்றி ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை அவர்களின் விண்டு ஸ்கிரீனில் ஓட்டாமல் தேவைப்படும் சமயத்தில் எடுத்து மிஷின் அருகில் காட்டி செல்கின்றனர். இந்த காரணத்தினாலும் தாமதம் ஏற்படுவதனால் மத்திய அரசு ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு தான் வழங்க வேண்டும் என்ற வகையில் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களின் ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் KYC அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யப்படாத கார்டுகள் உடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் பணம் இருந்தாலும் KYC அப்டேட் செய்யப்படவில்லை என்றால் அந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான விவரங்களை அறிவதற்கு சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சுங்கச்சாவடி ஊழியர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில வாகன ஓட்டிகள் வேறு வேறு ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதால் மத்திய அரசு இந்நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.